Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 அக்டோபர் 2025: முருகப்பெருமான் திருக்கல்யாணம்

திருச்செந்தூர், குமார வயலூர் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம்.ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 அக்டோபர் 2025: முருகப்பெருமான் திருக்கல்யாணம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-11 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி மறுநாள் விடியற்காலை 5.22 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : பூராடம் நண்பகல் 1.08 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் உள்பட முருகன் கோவில்களில் அபிஷேகம்

இன்று வாஸ்து நாள் (காலை 7.44 மணிக்கு மேல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று) திருச்செந்தூர், குமார வயலூர் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம். திருவனந்தபுரம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. திருக்குருகை பிரான் சேனை முதலியார் திருநட்சத்திர வைபவம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-வரவு

கடகம்-அமைதி

சிம்மம்-பரிசு

கன்னி-கவனம்

துலாம்- புகழ்

விருச்சிகம்-இன்பம்

தனுசு- பாராட்டு

மகரம்-ஆக்கம்

கும்பம்-தெளிவு

மீனம்-பணிவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com