இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 மே 2025

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 மே 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-25 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி பிற்பகல் 3.16 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.23 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்

ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி

இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம். சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ரதோற்சவம். திருஉத்திரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி அம்மன் சிவலிங்க பூஜை செய்தருளிய காட்சி. குறுக்குத் துறை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுரிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-செலவு

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-ஆர்வம்

கடகம்-பெருமை

சிம்மம்-ஈகை

கன்னி-உழைப்பு

துலாம்- கவனம்

விருச்சிகம்-அமைதி

தனுசு- வரவு

மகரம்-நிறைவு

கும்பம்-கடமை

மீனம்-இரக்கம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com