இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 ஏப்ரல் 2025

இன்று கார்த்திகை விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 ஏப்ரல் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-16 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை.

திதி : துவிதியை இரவு 8.48 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம் : கார்த்திகை இரவு 9.52 மணி வரை. பிறகு ரோகிணி.

யோகம் : சித்த, அமிர்தயோகம்.

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, வடபழனி முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்

இன்று கார்த்திகை விரதம். சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாவை சூடியருளல். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழா தொடக்கம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருவான்மியூர், ஸ்ரீசித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னர் கண்ணாடி மாளிகை எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர் அபிஷேகம். திருநெல்வேலி கம்பம் 3-வது நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நற்செயல்

ரிஷபம் - பாராட்டு

மிதுனம் - பரிசு

கடகம் - நன்மை

சிம்மம் - வெற்றி

கன்னி - ஆர்வம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - நன்மை

தனுசு - வரவு

மகரம் - நலம்

கும்பம் - பக்தி

மீனம் - பாராட்டு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com