திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம்

பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம்
Published on

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முறையே காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரையில் வாகன சேவைகள் நடக்கின்றன.

பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பண உற்சவம் நேற்று மாலை நடந்தது. கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com