திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை இன்று நடக்கிறது

பெருந்தமிர்து பூஜை இன்று காலை தொடங்கி மதியம் வரை நடக்கிறது. ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை இன்று நடக்கிறது
Published on

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று ஆடிமாதம் முதல் தேதி என்பதால் பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆடி மாதம் இரண்டாம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவப்பெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் வரை நடக்கிறது.

முன்னதாக உதயமார்த்தாண்ட மண்டபத்தில் கலசங்கள் நீர் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. பூஜைகளுக்கு பின்னர் ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com