தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா: ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா: ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா
Published on

கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.பின்னர் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று சாமி படி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேவ புஷ்கரணியில் சாமி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மகா அபிஷேகமும் நடந்தது.

இதை தொடர்ந்து தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து மூர்திகம் (மூஞ்சூர்) வாகனத்தில் விநாயகர், மயில் வானத்தில் முருகன், அன்னப்பட்சி வாகனத்தில் மதுரநாயகி அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி சாமி வீதி உலா நடந்தது.

வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பிராயச்சித்த அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com