திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா

சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா
Published on

திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ரதவீதி வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடந்தது.

கொடை விழா தினமான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகா சபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com