ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தோப்புற்சவம்

அலங்கார மண்டபத்தில் தோப்புற்சவம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் நடத்திய உற்சவம் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தோப்புற்சவம்
Published on

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஞானப்பிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரின் விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், பட்டுவஸ்திரங்களையும் திருடி சென்றதை, தொண்டமான் சக்கரவர்த்தி மாறு வேடத்தில் சென்று திருடர்களை பிடித்து மீண்டும் சுவாமி, அம்பாளின் ஆபரணங்களையும், பட்டு வஸ்திரங்களையும் ஒப்படைத்ததாக ஐதீகம்.

இந்த சம்பவத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோப்புற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தோப்புற்சவம் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக 4 மாட வீதிகள் அருகில் கொண்டு வந்தனர்.

கோவில் அர்ச்சகர்கள் சம்பிரதாய முறைப்படி திருடர்கள் வந்து நகைகளை திருடி செல்ல முயற்சிப்பது போன்றும், தொண்டமான் சக்கரவர்த்தி விரட்டி பிடிப்பது போல் கோவில் அர்ச்சகர்கள் நடத்திய உற்சவம் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் கோவில் அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com