சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது

கோவில் நடை மீண்டும் மே 14-ந்தேதி திறக்கப்படும்.18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
18 படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு படைப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.
18 படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு படைப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.
Published on

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 12-ந்தேதி முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 15-ந்தேதி விஷூ பண்டிகை அன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் விஷூக்கனி காணல் நிகழ்ச்சியில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. முன்னதாக நேற்று மதியம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் 18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம்(மே) 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com