பிரதிஷ்டை தின பூஜைக்காக சபரிமலை நடை 4-ந்தேதி திறப்பு

இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
பிரதிஷ்டை தின பூஜைக்காக சபரிமலை நடை 4-ந்தேதி திறப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.

அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.

இதற்காக சபரிமலை கோவில் நடை 4-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (5-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்குகிறது.

தொடர்ந்து நடைபெறும் வழிபாட்டுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பிறகு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com