ஆனைமலையில் ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி பூஜைகள் நடைபெற்றது
ஆனைமலையில் ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

ஆனைமலையில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமாங்கல்ய சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து பூக்கள், மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9 பழங்கள் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி தீபாராதனை காண்பித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com