கோபால்பட்டி அருகே மகா பிரத்யங்கரா தேவி பூஜை

மூட்டை, மூட்டையாக காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு யாகம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோபால்பட்டி அருகே மகா பிரத்யங்கரா தேவி பூஜை
Published on

கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை பகுதியில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கராதேவி பூஜை நேற்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அங்குள்ள கோசாலையில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி கோ பூஜை நடந்தது. மேலும் ஆஞ்சநேயர், நாகர் சன்னதியிலும் பூஜை நடந்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் மகா பிரத்யங்கரா தேவி பூஜை நடைபெற்றது.

இதில் மூட்டை, மூட்டையாக காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com