ஆடிப்பூர விழாவையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

13-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.ஆடிப்பூர விழா 22-ந்தேதி நடக்கிறது.
ஆடிப்பூர விழாவையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
Published on

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர விழா தொடங்குகிறது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து வருகிற 13-ந்தேதி கொடியேற்றப்பட்டதும், தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com