மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடை அடைப்பு

திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.
மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடை அடைப்பு
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்படாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com