மடப்புரம் விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா

விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
மடப்புரம் விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா
Published on

மதுரை அருகே திருப்புவனம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவுக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். பொதுவாக விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com