நாகை தூய லூர்து அன்னை ஆலய தேர்பவனிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தூய லூர்து அன்னைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டனர்.
நாகை தூய லூர்து அன்னை ஆலய தேர்பவனிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
Published on

நாகையில் பிரசித்தி பெற்ற தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் சிறிய தேர் பவனி நடந்து வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக தூய லூர்து அன்னைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்புனிதம் செய்யப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் தேர்பவனியானது தொடங்கியது. தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com