குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
Published on

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது.

மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com