குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.ஏராளமான பெண்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com