குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா 31-ந்தேதி தொடங்குகிறது

1-ந்தேதி கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.2-ந்தேதி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா 31-ந்தேதி தொடங்குகிறது
Published on

தமிழகத்தில் தசரா திருவிழாவில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொடை விழா வரும் வருகிற 31-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

ஆகஸ்டு 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.

2-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், 10 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது.

ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com