சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

திருவிழா 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
Published on

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இதில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்து செல்வார்கள்.

இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதையொட்டி நகரத்தார்கள் சார்பாக 52-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன் அம்மன் மின் அலங்காரத்தில் நான்கு ரத வீதி பவனி வந்தார். இதில் பெண்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்.

அர்ச்சகர் சண்முகவேல் அம்மனுக்கு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து, பூச்சொரிதல் விழா, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com