நீலிகணபதிபாளையம் கருடபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் கருடபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நீலிகணபதிபாளையம் கருடபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

மங்கலம் ஊராட்சி நீலிகணபதிபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, சமேத கருடபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை சிறப்புபூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கருடபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் நீலிகணபதிபாளையம், சுல்தான்பேட்டை, எம்.செட்டிபாளையம், வி.ஐ.பி.நகர், மீனாட்சிநகர், ஜீவாநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கருடபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற போது கோவிலின் கோபுரத்தைச் சுற்றி நேற்று கருடன் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் கருடன் சென்றுவிட்டது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com