சித்தோடு அருகே ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

மகா மண்டபம், விமான கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் மற்றும் வர்ணம் தீட்டப்பட்டது.
Anjaneyar
ஆஞ்சநேயர்
Published on

ஈரோடு அடுத்த சித்தோடு அருகில் குட்டை தயிர் பாளையத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் புதியதாக மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், விமான கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் மற்றும் வர்ணம் தீட்டப்பட்டது.

ஆச்சார்ய, ஜீயர் ஸ்வாமிகள் அனுக்கிரஹத்தாலும், திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பக்த ஆஞ்ச நேயர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

நேற்று வாஸ்து சாந்தி, ம்ருத்ச ங்கிரஹணம் பாலிகா ஸ்தாபனம், அங்குராப்பனம், சோமகும்ப ஆவாஹனம், ரஹா பந்தனம், கும்ப ஸ்தாபனம், தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை இரண்டாம் கால ஹோமம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, திருவாராதனம், த்வார, தோரண, கும்ப, ஸ்ரீ சக்ராப்ஜ மண்டல சதுஸ்தான ஆராதனம், வேதீகாபீட பரிகால்பனம், பூர்ணாஹுதி, தீபாரதனை, சாற்றுமுறை, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது .

இன்று மாலை 5.30 மணி அளவில் மூன்றாம் காலம், தீபாரதனை, சாற்றுமுறை, தீர்த்தம், பிரசாதமும் வழங்குதல், விமான கலச ஸ்தாபனம், ரத்னந்யாமம், யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை நான்காம் கால த்வார, தோரண, கும்ப, ஸ்ரீ சங்ராட்டாக மண்டல ஆராதனம், நான்காம் கால மூல மந்த்ர, தத்வந்யாக பிராண பிரதிஷ்டை ஹோமங்கள், நாடிஸந்தானம், ஸ்பர்ணாஹூதி, மஹா பூர்ணாகுதி யாத்ராதானம், கடங்கள் புறப்பாடும் காலை ஆறு மணிக்கு மேல் 6:45 மணிக்குள் விமான கோபுரம், மூலவர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா சம்ப்ரோக்ஷணமும் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மஹா தீபாராதனையும் , சாற்று முறை, புஷ்பாஞ்சலி, அபராதக்ஷமாபனம், தீர்த்தம், பிரசாதம், மஹா ஆசீர்வாதம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. இதில். முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர் குழு மற்றும் தக்கார் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com