நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் கொடியேற்றம்

தேரோட்டம் 24-ந்தேதி நடைபெறுகிறது. 25-ந்தேதி அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.
கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.
Published on

நெல்லை மாவட்டத்தில் ஜீவநதியாய் விளங்கும் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் ராஜவல்லிபுரம் அருகே அமைந்துள்ளது செப்பறை அழகியகூத்தர் கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் உள்ளனர். நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகியோருக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்துள்ளார்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 8 மணி அளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் தொடர்ந்து விழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள், சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வருகின்ற 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடராஜர் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்துக்கு ஏழுந்தருளல் நடைபெற்று, தொடா்ந்து சிவப்பு சாத்து, வெள்ளை சாத்து மற்றும் பச்சை சாத்து தாிசனம் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. மறுநாள் 25-ந்தேதி அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் மற்றும் நடன தீபாராதனையும், சுவாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com