திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேர்கால் நடும் நிகழ்ச்சி

தேரோட்டம் 30-ந் தேதி நடக்கிறது.கொடியேற்றம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
தேர்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.
தேர்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.
Published on

காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சிவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நடைபெற்றது. நேற்று காலை 5 தேர்களுக்கான தேர்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மேற்சவ விழா கொடியேற்றம் வருகிற 16-ந் தேதியும், தியாகராஜர் ஆட்டம் எனப்படும் உன்மத்த நடனம் 27-ந் தேதியும், தேரோட்டம் 30-ந் தேதியும் நடக்கிறது. சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

தெப்போற்சவவிழா அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com