தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது

காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது
Published on

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.

அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷம் ேதாறும் அபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் விநாயகர், ராஜராஜசோழன், பெருவுடையார்-பெரியநாயகி, அம்பாள், முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com