நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா: சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதிஉலா

நாளை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார்.தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
Published on

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

நேற்று 6-வது நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி, டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் திருவிழாவில் மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார். இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேரை பார்வையிட்டு, தொடர்ந்து வீதி உலா செல்கிறார்கள்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணி அளவில் சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளுகிறார்கள். காலை 7.30 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்காக தேர்களை தயார் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com