லாஸ்பேட்டையில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

7-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது.
லாஸ்பேட்டையில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம்
Published on

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் இணைந்து ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வருகிறது.

சுப்ரபாத சேவை

7-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. திருக்கல்யாண வைபவத்திற்காக நேற்று முன்தினம் திருமலையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட உற்சவருக்கு, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை சுப்ரபாத சேவையுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், செல்வகணபதி எம்.பி, முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் சாமி எழுந்தருளினார்.

திருக்கல்யாணம்

அங்கு சாமிக்கு காப்பு கட்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com