இருநாழி நெல் பெற்று இமயம் விடுத்து வந்த அம்பிகை!- நெல்லையப்பர் தல வரலாறு

நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி தரக்கூடியவளாக இறைவி காட்சி தருகிறாள்.
Nellaiyappar
நெல்லையப்பர்
Published on

நெல்லை செல்வார்க்கு எல்லையில்லா செல்வமே

தொல்லை தீர்க்க வல்லக்குமரியுண்டு நெல்லுச்சோறுடைத்

தருவள் பொல்லாப்பிள் ஐயமதீர்க் அறிவுக்கூட் கந்தனோடு

வேணுவநாதர் தொழ வேண்டுவன அருளித் தருவானே!

திருநெல்வேலி என்றாலே நெல்லையப்பர் கோவில் தான் அனைவருக்கும் நியாகபகத்தில் வரும்.இத்தலம் மிகவும் விசேஷ சிறப்புடையது. பொதுவாக எல்லா கோவிலிலும் அம்பாள் அருள் மிகுந்தவள் என்று தான் போற்றாப்படுவாள். ஆனால் இத்தலத்து இறைவி நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி தரக்கூடியவளாக காட்சி தருகிறாள்.

இறைவன்- அருள்மிகு நெல்லையப்பா்.

இறைவி -அருள்தரும் காந்திமதி அம்மன்.

தீா்த்தம் - பொற்றாமரை தீா்த்தம்(சுவா்ணபுஷ்கரணி), கரிஉருமாறிதீா்த்தம், வெளித்தெப்பம்க்குளம்(சந்திரபுஷ்கரணி), சிந்துபூந்துறை உட்பட 32 தீா்த்தங்கள்.

தல விருட்சம் - முங்கில்.

இசைக்கருவி- சாரங்கி.

இத்தலத்தில் உள்ள தூண்கள் இசையை மீட்டக்கூடியதாக இருக்கிறது. இத்தலத்தினை வேணுவனம், நெல்லூா், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம் என்றும் அழைப்பர்.

சிறப்பு:

முன்பொருமுறை உமாதேவி, தான் படைத்த உலகத்தைக் காப்பதற்காக இறைவனை வேண்டித் தவம் இயற்றிட இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, கயிலை மலையினை விட்டு நீங்கி வேணுவனம் எனும் இவ்வடத்தை வந்து அடைந்தாள்.

கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்துத் தவமிருந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளா்த்தாள். நெல்லை நாதனது திருவருள் கோலக்காட்சி எய்தி, அவரை மணந்தருளினாள்.

காந்திமதி அன்னை கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருநாமத்துடன் தவக்கோலம் கொண்டது. உயிர்களோடு இரண்டறக் கலந்து, சிவப்பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிசி கொடுத்தது போன்ற பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது.

இங்கு மார்பில் சிவலிங்கம் தரித்த நெல்லை கோவிந்தா், வேணுவனநாதா் உடன் அருகருகவே ஒன்றாக காட்சிதருவதும் சிறப்பு . குழந்தைப்பேறு அருளும் பிள்ளைத்தொண்டு பாதையுடன் கூடிய பொள்ளாப்பிள்ளையார் சந்நிதி உள்ளது.

இத்துடன்  குருமுருகன் சந்நிதி,  குபேரலிங்க சந்நிதி, மகிஷாசுரமா்த்தினி, மஞ்சன வடிவம்மன் (பண்டாசுர மா்த்தினி)சந்நிதி, சரஸ்வதி அம்மன் சந்நிதி என ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடம் இடம்பெற்றுள்ளது.

Nellaiyappar

வேணுவனத் திருவிளையாடல்:

நான்மறைகளும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டின. எனவே வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க இறைவன் லிங்கமாய் அமா்ந்தான் என்பது தலபுராணம்.

இந்த மூங்கில் காட்டில், பாற்குடம் சுமந்து சென்ற இராமக்கோன் என்பவனை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறி விட்டுப் பாலைத் தன்மேல் கவிழச்செய்தார். அப்போது அவனால் வெட்டுண்டார்.வேணுவனநாதராக வெட்டுண்டபடி காட்சியருளினார். அதேபோல் தாருகாவனத்து முனிவா்களின் செருக்கை அடக்கிய கீா்த்தியுடைய கங்காளநாதாரின் பிச்சாடன மூா்த்தி கோலமும் புகழ் உடையது.

சைவ ஆகமங்கள் 28ல் காமிக ஆகமப்படி அமைந்த இத்திருக்கோவில் மிக்க அழகுடையதாகும். இந்திரத்துய்மன் என்னும் அரசனுக்குத் துருவாச முனிவா் இட்ட சாபம் நீங்க உதவிய “கரிஉருமாறிதீா்த்தம்“ மிகவும் சிறப்புடையது.

ஸ்வேத கேது என்கிற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு அனுதினமும் நெல்லையப்பரைப் புஜித்த வந்தான். வாரிசு இல்லாது அவனது அந்நீமக்காலம் நெருங்கியதை அறிந்து இறைவனது ஆலயத்திலே அமா்ந்து சிவபுஜை செய்து கொண்டிருந்தான்.

அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள வந்தான், ஆனால் அந்தப் பாசமானது இறைவன் மீதும் விழுந்தது. அப்போது இறைவன் காலனைக் காலால் கடிந்தார். அரசனை இறைவன் ஆட்கொண்டு அருளினார். ” கூற்றுதைத்தநெல்வேலி“ என்கிற பொரியபுராண பாடல்(886) வரிகள் மூலம் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

இத்திருக்கோவிலின் சுவாமி சந்நிதி முதலாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியா் சந்நிதி அருகில் இந்த காலசம்ஹாரமூா்த்தியின் கோலம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் புரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திர தினங்களில் பஞ்சமூா்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து திருவீதி உலாவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

திருக்கடையூாரில் இறைவன் மார்கண்டேயனுக்கு அருள் பாலித்தது இளம் வயதுடையவனுக்கு அருளியதாகும். அனால் இங்கு முதுமையடைந்த இவ்வரசனுக்கு மரணபயத்திலிருந்து முக்தியளித்தது மிகவும் சிறப்பு.

Nellaiyappar

கல்வெட்டுக்கள்:

இத்திருக்கோவிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் பல மிகவும் பழமையானவை. அவை வட்டெழுத்து, கிரந்தம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற எழுத்துக்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டிருந்த போதிலும் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் சம்பந்தர் காலத்திற்கு பிந்தியவையாகும்.

இங்குள்ள கல்வெட்டுக்களில் பழமையானது சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -986) என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும். தாசி ஒருவர் விளக்கெரிப்பதற்காக தினசரி ஆழாக்கு நெய் வழங்க தானம் அளித்த செய்தியை தருகின்றது.

மூல காலிங்கர் கோயிலில் சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டுக்கள் உள்ளன. இவை அனைத்தும் 10ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவையாகும். இக்கல்வெட்டுக்கள் வட்டெழுத்தில் உள்ளன.

இவை விளக்கெரிப்பதற்காக தானம் வழங்கிய செய்தியினைக் குறிப்பிடுகின்றன.முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012 – 1044),முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) போன்ற சோழ மன்னர்களுடைய காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் இக்கோயிலில் முதல் திருச்சுற்றில் உள்ள வட்டத்தூண்களில் காணப்படுகின்றன.

இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1267) என்கிற பாண்டிய மன்னன் கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டில் இத்திருக்கோவில் இறைவனை ‘திருநெல்வேலி உடையநாயனார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244) விக்கிரம பாண்டியன் (கி.பி.1250-1276), வீரசோமேஸ்வரன் (கி.பி.1236-1258) இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251 திருவாதிரை திருவிழா நடனம் பற்றியது) இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1258-1265) முதலாம் மாறவர்மன் குலகேரன் (கி.பி.1258-1308 – திருச்சுற்று மதில் எழுப்பியது) முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டியதேவன் (பொள்ளாப்பிள்ளையார் சந்நிதி உருவாக்கம்), பராக்கிரம பாண்டியன் (வேணுவனநாதர் எனும் பெயர் இடம்பெற்ற முதல் கல்வெட்டு) வீரசங்கிலி மார்த்தாண்டவர்மன் (கி.பி.1546-இசைத்தூண் மண்டப உருவாக்கம்) போன்றோரின் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.

"சிர்சான்ற நெல்லின் ஊா்கொண்ட உயா் கொற்றவ" எனும் மதுரை காஞ்சி வரிகள் சாலியூா் எனக்குறிப்பிட்டு இதனை சிறப்பிக்கிறது.

ஆயிரங்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், மணி மண்டபம், வசந்த மண்டபம் போன்றவையாவும் இத்தலத்தின் சிற்ப நுணுக்கங்களை குறிக்கின்றன.

nellaiyappar

தாமிரசபை:

பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை இக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி தாமிரசபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது. உற்சவ மூா்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவா் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றார்.

அப்பா் பெருமானின் “ குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்“ என்கிற பாடலுக்கு இலக்கணமான அக்னி சபாபதி என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜா் சந்நிதியும் இத்தலத்தில் காணவேண்டிய ஒன்றாகும்.

புனா்பூச நட்சத்திரக்காரா்கள் வழிபட வேண்டிய தலம். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலங்களில் மஞ்சன வடிவம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் மணமாகாதவா்களுக்கு விரைவில் திருமணமாகும். பகைவா் தொல்லை நீங்கும்.

இக்கோவிலில் ஆனிமாதம், பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் சிறப்புடையது.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 வரை

மாலை 4.00 மணி முதல் அறிவு 9.00 வரை.

நெல்லை செல்வார்க்கு எல்லையில்லா செல்வமே!

நெடுந்துயர் தீர்த்து நெல்லையப்பன் அருள்வானே!!

nellaiyappar
X

Maalai Malar
www.maalaimalar.com