இந்த வார விசேஷங்கள்: 24-3-2026 முதல் 30-3-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள்: 24-3-2026 முதல் 30-3-2026 வரை
Published on

24-ந் தேதி (செவ்வாய்)

* சஷ்டி விரதம்.

* பாளையங்கோட்டை கோபாலசுவாமி பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

* மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் விழா தொடக்கம்.

* கழுகுமலை முருகன் புஷ்பக விமானத்தில் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்)

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெரு மாள், ஆண்டாள் திருக்கோலம்.

* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர், பரமக்குடி முத்தாலம்மன் தலங்களில் அன்ன வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி)

* ராமநவமி.

* நெல்லை கைலாசபுரம் வரசித்தி விநாயகர் வருசாபிஷேகம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.

* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

* பழனி ஆண்டவர் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (சனி)

* திருச்சுழி சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு, அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானபால் ஊட்டுதல்.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

* கழுகுமலை சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு)

* சர்வ ஏகாதசி.

* திருவாரூர் தியாகராஜர் ஆழித் தேரோட்டம்.

* தாயமங்கலம் முத்து மாரியம்மன் விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்)

* பிரதோஷம்.

*நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

திருச்சுழி திருமேனி நாதர் திருக்கல்யாணம்.

* கீழ்நோக்கு நாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com