இந்த வார விசேஷங்கள்: 21-4-2026 முதல் 27-4-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள்: 21-4-2026 முதல் 27-4-2026 வரை
Published on

21-ந் தேதி (செவ்வாய்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் ஆரம்பம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கயிலாச காமதேனு வாகனத்தில் பவனி.

* வீரபாண்டி கவுமாரியம்மன் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (புதன்)

* சஷ்டி விரதம்.

* திருநெல்வேலி லட்சுமி நரசிங்கப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

* திருவையாறு சிவபெருமான் ஆதிசேஷ வாகனத்தில் பவனி.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் ஆரம்பம்.

* திருஉத்திரகோசமங்கை மங்களே சுவரி, திருவள்ளூர் வீரராகவர், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் தலங்களில் விழா தொடக்கம்.

* மேல்நோக்கு நாள்.

23-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* நெல்லை தச்சநல்லூர் நவநீத கிருஷ்ணர் வருசாபிஷேகம்.

* சீர்காழி சிவபெருமான் புஷ்ப விமானத்தில் பவனி.

* திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* சமநோக்கு நாள்.

24-ந் தேதி (வெள்ளி)

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் பவனி.

* சீர்காழி சிவபெருமான் வெள்ளி ரத உற்சவம்.

* மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (சனி)

* தஞ்சை பிரகதீசுவரர் ரிஷப வாகனத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நந்தீசுவர யாளி வாகனத்தில் உலா.

* கடையம் சிவபெருமான் இந்திர விமானத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (ஞாயிறு)

* மதுரை மீனாட்சி ந்தரேசுவரர் பட்டாபிஷேகம்.

* தூத்துக்குடி சுவாமி யானை

வாகனத்திலும், அம்பாள் அன்ன

வாகனத்திலும் பவனி.

* சீர்காழி சிவபெருமான் திருக்கல்யாணம்.

* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (திங்கள்)

* சர்வ ஏகாதசி.

* மதுரை கள்ளழகர் கோடை வசந்தோற்சவம் ஆரம்பம்.

* தூத்துக்குடி நடராஜர் உருகு சட்ட சேவை.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் அனுமந்த வாகனத்தில் சூர்ணா பிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com