இந்த வார விசேஷங்கள் 18-3-2026 முதல் 23-3-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 18-3-2026 முதல் 23-3-2026 வரை
Published on

18-ந் தேதி (புதன்)

* அமாவாசை.

* திருப்புவனம் கோதண்ட ராம சுவாமி, கம்பம் கம்பராயப் பெருமாள் தலங்களில் விழா தொடக்கம்.

* திருகண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

* கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (வியாழன்)

மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வைரமுடி சேவை.

* திருப்புவனம் கோதண்ட ராம சுவாமி புறப்பாடு.

* தொட்டியம் காளியம்மன் திருவீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

20-ந் தேதி (வெள்ளி)

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

21-ந் தேதி (சனி)

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி திருக்கல்யாணம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

* திருவாரூர் தியாகராஜர், திருப்புவனம் கோதண்ட ராம சுவாமி தலங்களில் புறப்பாடு.

* கம்பம் கம்பராயப் பெருமாள் திருவீதி உலா.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (ஞாயிறு)

* சதுர்த்தி விரதம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர், நாங்குநேரி வானமாமலை கோவில்களில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி காலை பள்ளியறை சேவை, இரவு சூர்ணோற்சவம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.

* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (திங்கள்)

* கார்த்திகை விரதம்.

* மதுரை, குன்றக்குடி, திருச்சுழி, பழனி, சுவாமி மலை, லால்குடி, திருப்பரங்குன்றம் தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.

* திருச்செந்தூர் முருகன் பவனி.

* திரிசிராமலை, கழுகுமலை, காஞ்சிபுரம், சென்னை தலங்களில் சிவபெருமான் விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com