அருணாசலேஸ்வரர் கோவிலில் காவடி ஊர்வலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சன்னதியில் தை கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் காவடி ஊர்வலம்
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சன்னதியில் தை கிருத்திகையையொட்டி சாமிக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கம்பத்திளையனார் சன்னதியில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் காவடிகளை ஏந்தி மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகர் கோவில்களில் தை கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com