தஞ்சை பெரியகோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா

தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மனுக்கு இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை பெரியகோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா
Published on

தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் உலக நன்மைக்காக பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா வைகாசி விசாகமான நேற்று மாலை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்களை அன்பளிப்பாக அளித்தனர். இந்த பூக்களை கூடைகளில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தனர்.

பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட ரோஜா, மகிழம், தும்பை உள்ளிட்ட 36 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,000 கிலோ ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com