

மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 திவ்விய தேசங்களில், 63வது திவ்ய தேசம் ஆகும். இங்கு தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்கள் வீற்று அருள்பாலிக்கின்றனர்.
இந்தகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று அதிகாலை பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து வருகிற 23-ந்தேதியில் இருந்து அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் புறப்பாடு, துவஜாரோகணம், கேடயம் புறப்பாடு, மங்களகிரி, யாளி வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 30-ந் தேதி காலை விமரிசையாக நடைபெற உள்ளது.
தொடர்ந்து அடுத்தமாதம் மே 4-ந் தேதி முதல், 7-ந் தேதி வரை, விடையாற்றி உற்சவம் மற்றும் "புஷ்ப பல்லக்கு" வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.