சோலைமலை முருகன் கோவிலில் சாமி புறப்பாடு

அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
சோலைமலை முருகன் கோவில்
சோலைமலை முருகன் கோவில்
Published on

அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை மாத 2-வது சோமவார விழா நடந்தது. இதையொட்டி சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடந்தது. மூலவர் சன்னதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் வலம் வந்து பின்னர் இருப்பிடம் சேர்ந்தது. முன்னதாக மூலவர் சுவாமி, வித்தகவிநாயகர், மற்றும் வேல் சன்னதியிலும் சர விளக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com