நாராயணசாமி கோவிலில் ஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது

உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை ஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.
நாராயணசாமி
நாராயணசாமி
Published on

உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை ஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, மாலை 6 மணிக்கு ஏடுவாசிப்பு, இனிமம் வழங்குதல் நடைபெறுகிறது. இதே போல் விழா நாட்களில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

20-ந்தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு, 9 மணிக்கு அய்யா வாகன பவனியும், 22-ந்தேதி மாலை 4 மணிக்கு வாகன பவனியும், அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு ஏடு வாசிப்பும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஊர்தலைவர் பிச்சைப்பழம் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com