முனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தினர்.
முனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
முனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆடி கிருத்திகை ஆகிய நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவில்கள் மூடப்பட்ட நிலையில் ஆடிமாத சிறப்பு நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் வழிபாட்டை நடத்தினர்.

நேற்று திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தினர். இதைப்போல திருக்காட்டுப்பள்ளியில் உள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com