மார்கழி மாதம்: திருப்பதி உள்பட 195 கோவில்களில் நாளை முதல் திருப்பாவை பாடப்படுகிறது

மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை முதல் திருப்பதி கோவில் உள்பட 195 கோவில்களில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது.
மார்கழி மாதம்: திருப்பதி உள்பட 195 கோவில்களில் நாளை முதல் திருப்பாவை பாடப்படுகிறது
Published on

மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை முதல் திருப்பதி கோவில் உள்பட 195 கோவில்களில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது.

திருப்பதி கோவிலில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கிறது. ஆனால் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படுகிறது.

நாளை சனிக்கிழமை மார்கழி மாதம் பிறப்பதால் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை நிகழ்ச்சி தொடங்குகிறது. ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை பெறுகிறது.

தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வேத விற்பன்னர்களைக் கொண்டு திருப்பாவை பாடப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், வரதராஜ சுவாமி கோவில் உள்பட 195 கோவில்களில் திருப்பாவை நிகழச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com