களத்திர மூலதன யோகம்

ஜெனன கால ஜாதகத்தில் உள்ள ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் யோகங்களில் களத்திர மூலதன யோகம் என்பதும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
களத்திர மூலதன யோகம்
Published on

ஜெனன கால ஜாதகத்தில் உள்ள ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் யோகங்களில் களத்திர மூலதன யோகம் என்பதும் ஒன்றாகும். இந்த யோகத்தின் மூலம் மனைவி அல்லது கணவன் வழியில் ஒருவருக்கு பொருளாதார லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதாவது ஜாதகத்தின் 2-ம் வீட்டின் அதிபதியாக வரும் கிரகம் 7-ம் வீட்டு அதிபதியாக உள்ள கிரகத்துடன் அல்லது களத்திரகாரகன் என்று சொல்லப்படும் சுக்கிரனுடன் இணைந்திருப்பது அல்லது பார்வை மூலம் தொடர்பு பெறுவது ஆகிய நிலைகளில் களத்திர மூலதன யோகம் ஏற்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மனைவியும் பணிக்குச் சென்று பொருளீட்டுவதை இந்த யோகத்தின் வெளிப்பாடாக குறிப்பிடலாம். வழக்கம் போல இந்த யோகம் சம்பந்தப்பட்ட கிரகங்கள் 6812 ஆகிய ஸ்தானங்கள் அல்லது அதன் அதிபதிகள் ஆகிய கிரகங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் நல்ல பலன்களை அளிப்பதில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com