கடன் பிரச்சனையை தீர்க்கும் குளிகை நேரமும்... கிழமையும்...

குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சனை தீரும்.எந்த கிழமையில் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
கடன் பிரச்சனையை தீர்க்கும் குளிகை நேரமும்... கிழமையும்...
Published on

தீராதக் கடன் தொலையில் தவிப்பவர்களுக்கு தினமும் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் அதாவது நீங்கள் ஒருவருக்கு பத்தாயிரம்ரூபாய் தர வேண்டும் என்றால் அதில் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றால் அந்தத் தொகையை நீங்கள் இந்த குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைக்கப்படும். இது அனுபவபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்தக் குளிகை நேரத்தில் கடன் அடைக்கலாம், சுப காரியங்களை செய்யலாம். சவ அடக்கம் செய்யக்கூடாது. கடன் வாங்க கூடாது. காரணம் இந்த நேரத்தில் நீங்கள் இது போன்ற காரியங்களை செய்தால் அது மறுபடி, மறுபடி நடக்கும். எனவே மன உளைச்சல் தரும் கடன் தொல்லை இருப்பவர்கள் இந்த தினமும் வரும் குளிகை நேரத்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

குளிகை நேரம்

ஞாயிற்றுக்கிழமை : மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

திங்கட்கிழமை : மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

செவ்வாய்க்கிழமை : மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. முடிந்தவரையில் செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்கவேண்டும். ஆனால் செவ்வாய்க் கிழமையில் மட்டும் எந்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.

புதன்கிழமை : காலை 10.30 மணிமுதல் 12 மணிவரை

வியாழக்கிழமை : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

வெள்ளிக்கிழமை : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சனிக்கிழமை : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com