அட்சய திருதியை சிறப்புகள்

ஒரு சமயம் குபேர பகவான், தனது அனைத்து செல்வங்களையும் இழக்க நேரிட்டது.
அட்சய திருதியை சிறப்புகள்
Published on

* அட்சய திருதியை நாளில் தான் திரேதாயுகம் தொடங்கியதாக கூறப்படுகிறது.

* மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், அட்சய திருதியை நாளில் தான் ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தார்.

* ஒரு சமயம் குபேர பகவான், தனது அனைத்து செல்வங்களையும் இழக்க நேரிட்டது. இதனால் குபேரன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வழிபட்டார். இதையடுத்து சிவபெருமான், குபேரனை வடதிசைக்கு அதிபதியாக்கி, அழகாபுரியை ஆளும்படி அருள்புரிந்தார். இப்படி குபேரன் இழந்த செல்வங்கள் அனைத்தையும் ' திரும்பப் பெற்றது அட்சய திருதியை நாளில் தான். '

* சிவபெருமான், பிட்சாடனராக வந்து அன்ன பூர்ணியிடம் யாசகம் பெற்றது அட்சய திருதியை நாளில் தான்.

* அட்சய திருதியை நாளில் தான் வேத வியாசர் மகாபாரதத்தை சொல்ல விநாயகர் எழுத தொடங்கியதாக நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com