யோகங்களை வழங்கும் யோக பைரவர்

பொன் வண்ணத்தோடு அகன்ற கண்கள் கொண்ட மீன்கள் அவரிடம் உள்ள செல்வத்திற்கு பாதுகாப்பாளர்களாக உள்ளனர்.வெளிவட்டத்தாமரைப் பொய்கை நடுவே 16 பவள மாளிகைகளில் பொன் பொருள், செல்வங்கள் குவிந்துள்ளன.
யோகங்களை வழங்கும் யோக பைரவர்
Published on

பைரவ பூஜையைப் பற்றிச் சொன்னதும் அசிதாங்க பைரவர், குரு பைரவர், உன்மத்த பைரவர், ப்ரசண்ட பைரவர், சம்ஹார பைரவர், ஸ்வர்ணகெர்ஷண பைரவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றனர்.

இவர்களில் அதிஷ்டங்களைத் தருகிற யோக பைரவரும் இடம் பெற்றுள்ளார்.

இந்த யோக பைரவரின் சுற்று தேவதைகளை அறிந்து வணங்கினால் நமக்கு அவயோகங்கள் சுபயோகமாகி அதிஷ்ட யோகங்கள் உண்டாகும்.

இவர் கற்பகச் சோலைகளுக்கு நடுவே பொங்கு பூம்பினல் நடுவில் உள்ள மகராலயத்தில் வீற்றுள்ளார்.

மகரங்களால் தாங்கப்படுகிற பொன்மயமான கோட்டையில் சகல பரிவார தெய்வங்களோடு வெண்குதிரையில் இரட்டை வெண் குதிரையில் ஏறி இரு மீன்கள் பொறித்த கொடியோடு மச்ச முத்திரை தாங்கியவராக ஜொலிக்கிறார்.

பொன் வண்ணத்தோடு அகன்ற கண்கள் கொண்ட மீன்கள் அவரிடம் உள்ள செல்வத்திற்கு பாதுகாப்பாளர்களாக உள்ளனர்.

பாக்யேஸ்வரி, ஆனந்த வல்லி என்ற இரண்டு மனைவியர் அருகில் அமர்ந்திருக்க மீன் கொடி, நகுலம் என்ற கீரிப்பிள்ளை, சூலம், அமிர்த கலசம் ஆகியவற்றை ஆபரணங்கள் போல வைத்துக் கொண்டுள்ளார்.

மகராலயம் என்ற அறுகோணக் கோட்டையின் ஆறு பக்க மூலைகளிலும் உப்பரிகை இட்டு உல்லாசச் சிரிப்புடன் உல்லாசினி, நிராகுலி, யோகினி, சல்லாபினி, ஹிதேஸ்வரி, விநோதினி ஆகிய ஆறு யோக சக்தி தேவிகள் உள்ளனர்.

அடுத்ததாக எண் கோண வடிவக் கோட்டையில் அஷ்ட பைரவர்களும் வெளிவட்டத்தாமரைப் பொய்கை நடுவே 16 பவள மாளிகைகளில் பொன் பொருள், செல்வங்கள் குவிந்துள்ளன.

அதனுள் 16 பேறுகளை வழங்கக் கூடிய 16 லட்சுமிகள் கொலு வீற்றிருக்கின்றனர்.

இவர்களை அடுத்து உள்ள வனத்தில் 64 மாளிகைகளில் 64 யோகினியர்களுடன் 64 பைரவர்கள் அமர்ந்திருக்க உபதேவதை மற்றும் காவலர்களாய் வேதானர்கள் வீற்றுள்ளார்கள்.

அடுத்ததாக உள்ள மூன்று வட்டங்களில் காடுகள் முதல் வட்டத்திலும் அகழி 2&ம் வட்டத்திலும் மலைகள் மூன்றாம் வட்டத்திலும் உள்ளன. இவற்றில் காட்டில் வனபாலகர்கள், அகழியில் தீர்த்த பாலகர்கள், மலைமேல் & சேத்திர பாலகர்கள் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com