ஸ்ரீ சனிபகவானுக்கு உகந்த விரதங்கள்

சனிக்கிழமைதோறும் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.
ஸ்ரீ சனிபகவானுக்கு உகந்த விரதங்கள்
Published on

1. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எதுவும் சாப்பிடாமல் முழுமையாக உண்ணா நோன்பு இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.

2. சனிக்கிழமைதோறும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் இதை செய்யலாம்.

4. ஒரு தேங்காயை ஸ்ரீ சனிபகவான் கோவிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.

5. ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணை, பால், தயிர் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

6. ஸ்ரீ சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன்பெறலாம்.

7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

8. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

9. அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது ஸ்ரீ சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com