செவ்வாய் தோஷம் நீக்கும் முருகப்பெருமான்

முருகபெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
செவ்வாய் தோஷம் நீக்கும் முருகப்பெருமான்
Published on

முருகனின் திருஉருவங்கள்:-

1, சக்திதரர், 2. கந்தசாமி, 3.தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5.கஜவாகனர், 6.சரவணபவர், 7.கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10.தாரகாரி, 11.சேனாபதி, 12. பிரம்மசாத்தர், 13. வள்ளிகல்யாண சுந்தரர், 14.பாலசுவாமி, 15.கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர் எனப்படும்.

முருகன் அழித்த 6 பகைவர்கள் ஆணவம், கன்மம், குேராதம், லோபம், மதம், மாற்சரியம். முருகனை பூஜிப்பதால் சிறப்பு பெற்ற தலம் மயிலாடு துறை அருகே திருவிடைக்கழி ஆகும். இங்கு முருகபெருமானுக்கு பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குராமரத்தடியில் முருகன் பூஜித்தது). அதுபோல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

முருகபெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது- திருச்செந்தூர்.

2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்.

3. இந்த இருவரின் சகோதரனான சிங்கமுகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கிறது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இந்த பள்ளம் ஏற்பட்டது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்ைமயுடன் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

முருகபெருமானின் வலப்புறம் உள்ள 6 கரங்களில் அபயகரம், சேவல்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும் இடப்புறம் உள்ள 6 கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com