கோரிக்கைகளை நிறைவேற்றும் அரச மர தரிசனம்!

ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது. அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம் தான் அந்த அரச மரம்.
கோரிக்கைகளை நிறைவேற்றும் அரச மர தரிசனம்!
Published on

ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.

சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க 18 படிகள் ஏறுவதற்கு முன்பு அங்கே ஒரு அக்னி குண்டம் இருக்கும்.

அங்குதான் தேங்காய்களை போடுவார்கள். அதன் அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. அது விசேஷமானது.

அய்யப்பன் மகிஷியை வதம் செய்த பின்னர்தான் அவருடைய அவதார காரணம் பூர்த்தியானது.

அதன் பின்னர் சபரிமலையில் தவம் இருப்பதற்காக அங்கிருந்து ஓர் அம்பை எய்ததாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ

அங்கு தனக்கு கோவில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார் அய்யப்பன்.

அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம்தான் அந்த அரச மரம்.

எனவே அந்த மரத்தின் முன்னால் நின்று நாம் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக அய்யப்பன் அருளால் நிறைவேறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com