search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகள் விரட்ட பயிற்சி
    X

    வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் காட்டுப் பன்றிகளை விரட்டும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகள் விரட்ட பயிற்சி

    • வேளாண்துறை கன்னியகோயில் உழவர் உதவியகம் சார்பில் பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளை விரட்டுவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம், ஆலடிமேடு மற்றும் தமிழக பகுதிகளில் மணிலா பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த குறை கேட்பு கூட்டத்தில் விவசாயி உமாசங்கர் கலெக்டர் மணிகண்டனிடம் புகார் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து வேளாண்துறை கன்னியகோயில் உழவர் உதவியகம் சார்பில் பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் காட்டுப் பன்றிகளை விரட்டும் செயல் விளக்கம் பயிற்சி நடத்தப்பட்டது.

    பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளை விரட்டுவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மற்றும் அதன் செயல் விளக்கத்தையும் செய்து காண்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியகோயில் வேளாண் அலுவலர் வளர்மதி வாசுதேவன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆறுமுகம், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிள்ளை யார்குப்பம், ஆலடிமேடு, கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×