என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாணவர் மீது மனித உரிமை மீறல் புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு கண்டனம்
- தமிழக காவல்துறையினர் மனித உரிமை மீறல் செய்துள்ளனர்.
- மாணவர் சங்க தலைவர் அரவிந்த சாமியிடம் காவல்துறையும், தமிழக அரசும் தனது வருத்தத்தை பதிவு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரவீன்பிர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழகத்தின் கவர்னர் பங்கேற்றார். இந்த விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்களின் உரிமைக்காக போராடி வந்த இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் அரவிந்த்சாமியை சோதனை என்ற பெயரில் தமிழக காவல்துறையினர் மனித உரிமை மீறல் செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக காவல்துறை தமிழக அரசின் கட்டுப் பாட்டில் உள்ளதா? கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? மாணவர்களின் நலனுக்காக போராடு பவர்களை தீவிரவாதிகள் போல உள்ளாடைகளையும் களைந்து விசாரணை நடத்துவது என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? மாணவர் சங்க தலைவர் அரவிந்த சாமியிடம் காவல்துறையும், தமிழக அரசும் தனது வருத்தத்தை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






