தார் சாலை அமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதுவை அரசு பொதுப்பணி துறையின் மூலமாக ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
தார் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
தார் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

திருபுவனை தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் திருபுவனை ரைஸ் மில் முதல் சன்னியாசிக்குப்பம் வரையிலான தார் சாலையை புதுப்பிக்க சுமார் 1.67 கி.மீ. நீளமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் அச்சாலையை புதுப்பிப்பதற்காக புதுவை அரசு பொதுப்பணி துறையின் மூலமாக ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது புதுவை அரசு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com