சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணி

டென்னிஸ் விளையாடும் மகளிர் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதுகுறித்து கென்னடி எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
Published on

புதுச்சேரி:

உப்பளம் தொகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் டென்னிஸ் விளையாடும் மகளிர் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து கென்னடி எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று இந்திரா காந்தி விளையாட்டு அரங்க சுற்று சுவரை புனரமைப்பு செய்வதற்காக ரூ. 12.83 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டது.

இந்த பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர். சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com