என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணித்துறை பணிகள் குறித்துஅமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு
    X

    பொதுப்பணித்துறை பணிகள் குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காட்சி.

    பொதுப்பணித்துறை பணிகள் குறித்துஅமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு

    • பொதுப்பணித்துறையில் கடந்த ஆண்டு பணிகள், வருகிற ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • சட்டசபையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து தொகுதிவாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பொதுப்பணித்துறையில் கடந்த ஆண்டு பணிகள், வருகிற ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நடைபெற்ற பணிகள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், சட்டசபையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து தொகுதிவாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள், உதவி, இளநிலை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×